Bigil Climax
பிகில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஆங்கில படம் ஒன்றில் இடம் பெற்றிருப்பதாக நெட்டிசன்கள் வீடியோவை வெளியிட்டு கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். தளபதி விஜய் நடிப்பில் வெளியான இப்படம் ரூ 300 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருந்தாலும் இந்த படத்தின் காப்பி அந்த படத்தின் காப்பி என்ற குற்றசாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

ஏற்கனவே சில வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது ஆங்கில படத்தில் இருந்து இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பிகில் படத்தில் விஜய் பெண் அணியை திட்டுவது போல அமைந்திருந்த காட்சியை போலவே உள்ளது.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து இருக்கறதே 7 சுரம் தானே.. பாவம் அட்லீ என்ன பண்ணுவாரு என கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.