Bigil Audio Launch New Update | Thalapathy63 | Vijay | It will be broadcast on Sun TV on September 22nd at 6.30pm | Atlee
தளபதி விஜய் அட்லீ அவர்களின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்த படம் பிகில். AGS குழுமம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரகுமான் அவர்கள் இசையமைக்கிறார்.

Bigil Audio Launch New Update : பிகில் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக விஜயுடன் இணைத்து உள்ளார். பெண்களின் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது.

வருகிற 19-ஆம் தேதி அன்று படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் என்றும் ரகுமான் அவர்களுக்காக நிகழ்ச்சி பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சிங்க பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், சமூக வலைதளத்தில் பெரிய சாதனையையும் படைத்தது.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் இப்படியும் ஒரு ஸ்பெஷலா? – இதோ அதிகாரபூர்வ அப்டேட்.!

இதனை தொடர்ந்து, இசை வெளியீட்டு தேதி 19 என்றும் அதனை சன் டிவி செப்டம்பர் 22 ஆம் தேதி ஒளிபரப்பும் என்றும் அர்ச்சனா தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, ஏன் நேரடி ஒளிபரப்பு இல்லை என்று கேட்டதற்கு, பதில் அளித்த அர்ச்சனா, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்களுக்கு முக்கியமானது ஆகும்.

படக்குழுவில் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஏற்றார் போல தேதி குறித்துளோம் என்றும் வார நாளில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருப்பதால் நேரலை சாத்தியம் இல்லை.

மேலும், சன் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பும் போது நிச்சயம் டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

சன் டிவியில் செப்டம்பர் 22 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here