Bigil Audio Launch Issues | Thalapathy Vijay | Atlee | Kollywood Cinema news | Tamil Cinema News | Nayanthara | Trending Cinema News
பிகில் இசை வெளியீட்டு விழாவில் பல சொதப்பல் நடந்தேறியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigil Audio Launch Issues : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவை காண ரசிகர்களுக்கு இலவச பாஸ் அளிக்கப்பட்டது, ஆனால் பலர் இந்த பாஸை கலர் ஜெராக்ஸ் எடுத்து முறைகேடாக உள்ளே சென்றுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் பல மாவட்டங்களை சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்களே இலவச பாஸை குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

பிகில் பட இசைவெளியீட்டு விழா நேரலை இல்லாததற்கு படக்குழு விளக்கம் – இதுதான் காரணமா .?

கலர் ஜெராக்ஸ் கொண்டு பலர் உள்ளே நுழைந்து விட்டதால் உண்மையான டிக்கெட் பாஸை வைத்திருந்த விஜய் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்று வரும் பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரே உள்ளே செல்ல முடியாமல் அரங்கத்திற்கு வெளியிலேயே அவதிப்பட்டு அசிங்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பலர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு சரியில்லை, சரியான முறையில் நிகழ்ச்சியை வழி நடத்தவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.