பிகில் பட நாயகி போட்ட ட்விட்டருக்கு கலாய்த்து தள்ளும் ரசிகர்களின் பதிவு வைரல்.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

ஒரே ஒரு ட்விட்டால்… ரசிகர்களால் பங்கமாய் கலாய்க்கப்படும் பிகில் பட நாயகி.!

இப்படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்டத்தின் அணியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வர்ஷா பொல்லம்மா சமீபத்தில் பிகில் படம் குறித்து வெளியிட்டிருந்த ட்விட் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

ஒரே ஒரு ட்விட்டால்… ரசிகர்களால் பங்கமாய் கலாய்க்கப்படும் பிகில் பட நாயகி.!

அதாவது, FIFA உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டி சென்றது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மெஸ்லி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் நடிகை வர்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் “Remembering #bigil” என்ன ட்வீட் செய்திருந்தார். இதனைக் கண்ட சில நெட்டிசன்கள் அவரது பதிவை ட்ரோல் செய்து பங்கமாக கலாய்த்துள்ளனர்.

ஒரே ஒரு ட்விட்டால்… ரசிகர்களால் பங்கமாய் கலாய்க்கப்படும் பிகில் பட நாயகி.!