குடும்பத்துடன் இருந்த போது செய்த தவறுகளை பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின் புரிந்து கொண்டேன் என நடன இயக்குனர் சாண்டி கண்ணீர் விட்ட படி பேசியது பலரையும் உருக்கியது.

Biggboss show changed sandy after vaiyapuri – பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடிய இருக்கிருகிறது. இந்நிலையில், சிறப்பு விருந்தினர்களாக ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்த மோகன் வைத்தியா, பாத்திமாபாபு, ரேஷ்மா, மீரா ஆகியோர் நேற்று வந்திருந்தனர். அப்போது, அங்கிருக்கும் புகைப்படங்களை வைத்து எல்லோரும் தங்களின் மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்படி பிக்பாஸ் கேட்க, எல்லோரும் மகிழ்ச்சியுடன் பேசினர். அதில், பிக்பாஸ் வீட்டில் இத்தனை நாள் மகிழ்ச்சியாக சென்றதற்கு சாண்டியே காரணம் என முகேன், லாஸ்லியா, ஷெரின், மோகன் வைத்தியா என அனைவரும் கூற சாண்டி அழுது விட்டார்.

மீண்டும் உள்ளே சென்று கொளுத்தி போட்ட வனிதா, வெளியேறும் ஷெரின்? – வீடியோ இதோ.!

அதன்பின் பேச வந்த சாண்டி பேச முடியாமல் சிறிது நேரம் நின்றார். அதன்பின், நான் எப்போதும் என்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவேன். அந்த நோக்கத்தில்தான் பிக்பாஸ் வீட்டிற்கும் வந்தேன். அது நிறைவேறிவிட்டது. அதேநேரம், எனது வீட்டில் நான் இப்படி இருந்ததில்லை. என் மனைவி என்னிடம் ஆசையாய் பேச வரும்போது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவேன். இப்போது அது தவறு எனப்புரிகிறது. இனிமேல், என் மனைவியை சிரிக்க வைத்து வீட்டில் ஜாலியாக இருப்பேன் என கண்ணீர் மல்க பேசினார்.

vaiyapuri

பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் வையாபுரி உள்ளே வந்து சில நாட்களிலேயே குடும்பத்தை பிரிந்த கவலையில் பேசும்போது நான் வீட்டில் மிகவும் சீரியஸாக இருப்பேன். அவர்களை வெளியே கூட்டிக் கொண்டு செல்ல மாட்டேன். ஆனால் பிக்பாஸ் வீடு வந்த பிறகுதான் நான் எவ்வளவு குடும்பத்தை இழக்கிறேன் என்பது புரிந்தது. என்னிடம் எதிர்பார்த்து என் மனைவிகள் மற்றும் பிள்ளைகள் எப்படி ஏமாந்து போயிருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டேன். எனவே, இனிமேல் நான் அப்படி இருக்க மாட்டேன். என் குடும்பத்தாரிடம் மகிழ்ச்சியாக பேசுவேன். அவர்களை வெளியே அழைத்து செல்வேன். இதற்காக என் மனைவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ‘ஐ லவ் யூ மனைவி’ என்றெல்லாம் மனம் உருகி பேசினார்.

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் வையாபுரி மனம் மாறியது போல் தற்போது மூன்றாவது சீசனில் சாண்டியும் மனம் மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.