losliya
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா இன்று தனது தந்தையை கண்டு கதறி அழும் புரமோ வீடியோ இன்று காலை வெளியானது.

Reason biggboss losliya crying meeting her father – பிக்பாஸ் வீட்டில் இளவரசி போல் பாவிக்கப்படுவபர் லாஸ்லியா. ஓவியா போல் இவருக்கும் ஆர்மி வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ஆரம்பமே அசத்தல்…ரஜினியின் மெகா அரசியல் திட்டம்… பீதியில் அரசியல் கட்சிகள்

இந்நிலையில், இன்றைய புரமோ வீடியோவில் அவரின் தந்தை வீட்டினுள் வரும்போது. அதிர்ச்சியில் கதறி அவர் அழும் காட்சிகள் அடங்கிய புரமோ வீடியோ வெளியானது.

லாஸ்லியா அப்படி அழுததற்கு காரணம் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 10 ஆண்டுகளாக தனது தந்தையை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருப்பதாக அவர் கூறியிருந்தர்.

மேலும், தனது தந்தையின் சாயலிலேயே இருப்பதால் சேரனையே அப்பா எனவும் அழைத்து வருகிறார்.

losliya

சில காரணங்களில் லாஸ்லியா மற்றும் அவரின் தாயை பிரிந்திருக்கும் அவரின் தந்தையை பிக்பாஸ் நிர்வாகம் தற்போது அவரின் கண் முன்னே நிறுத்தியுள்ளது.

அதனால்தான், அவரைக்கண்டு லாஸ்லியா கதறி அழுகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. லாஸ்லியாவை காண அவரின் தாயும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.