கிழிந்து போன ஜூன்ஸில் கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படத்தை பிக் பாஸ் பிரபலம் பங்கமாக கலாய்த்துள்ளார்.

BiggBoss Gabriella Photos Troll : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி படங்களிலும் சீரியலிலும் நடித்து வந்தவர் கேப்ரில்லா. மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் தினமும் காலையில் இவர் ஆடும் நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் ஆரிக்கு இடையே கடும் போட்டி நிலவியதால் கேப்ரில்லா ரூபாய் 5 லட்சத்துடன் இந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிழிந்த ஜூன்ஸ் உடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரியோ ராஜ் அவரை ரொம்ப கிழிஞ்சி இருக்கு கேபி என கலாய்த்து தள்ளியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.