பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss5 in 7th Elimination Analysis : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று நிலையில் இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் பிரியங்கா, தாமரைச்செல்வி, நிரூப், இமான் அண்ணாச்சி, பாவனி, ஐக்கி பெர்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை பிரியங்கா தாமரைச்செல்வி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அவர்கள் ஓட்டுகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

நிரூப் போட்டியாளர்கள் இருந்த இடம் சண்டையிட்டு சுவாரசியத்தை கூட்டுவதால் அவரை வெளியே அனுப்ப விரும்பவில்லை. இமான் அண்ணாச்சிக்கு சண்டையிட மீண்டும் அபிஷேக் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

இதனால் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் ஐக்கி பெர்ரிக்கு தான் இருப்பதாக கூறுகின்றனர். ஓட்டுக்கள் அடிப்படையில் அவர் தான் கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்ததாக பாவனி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.