பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ள நிலையில் தன்னுடைய சோக கதையை சொல்லி அனைவரையும் அழ வைத்துள்ளார் அமீர்.

Bigg Boss5 Day79 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இன்று 79-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் அமீர் நான் என்னுடைய அப்பாவை பார்த்ததில்லை. சின்ன வயதில் இருக்கும் போது என்னை டான்ஸராக பார்க்க வேண்டும் என என்னுடைய அம்மாவிற்கு ஆசை. பிரபுதேவா மாஸ்டர் பாடல்களை போட்டு விட்டு ஆடு ஆடு என்று சொல்லி அழைப்பார்.

நான் ஒரு சின்ன தொலைக்காட்சி சேனல்ல டான்ஸ் ஆடும் போது அதை ஊரெல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டார். இன்னைக்கு இவ்வளவு பெரிய ஷோல இவ்வளவு பெரிய தொலைக்காட்சி சேனல்ல நின்னுட்டு இருக்கேன். ஆனா என் அம்மா இல்லை என கண்கலங்க குடும்பத்தார் அனைவரும் அழுதுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.