முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது.

Bigg Boss5 Day6 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதுவரை ஐந்து நாட்கள் எபிசோட் ஒளிபரப்பாகி வந்த நிலையில் ஆறாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. உலக நாயகன் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

கமல்ஹாசன் பேசும் முதல் ப்ரோமோ விடியோ வெளியாகியிருந்த நிலையில் இந்த வீடியோ மூலம் திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் காட்சி ஒன்றில் மொத்தம் பதினேழு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். நமிதா மாரிமுத்து இதில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அவர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.