Bigg Boss4 Telecast Time Change

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரத்தில் விஜய் டிவி மாற்றம் செய்துள்ளது.

Bigg Boss4 Telecast Time Change : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது நடைபெற்று வருகிறது. 91 நாட்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இப்படியான நிலையில் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியிருப்பதால் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இன்று முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

10 மணி என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் பார்ப்பது என்பதே சாத்தியமில்லாத ஒன்று. இதனால் நேரம் மாற்றத்தை பலரும் வேண்டாம் என கூறி வருகின்றனர்.

சில நெட்டிசன்கள் நிகழ்ச்சி முடியவே இன்னும் பத்து நாள் தான் இருக்கிறது அதுக்கு 10 ஆட்டமா என கிண்டலடிக்கவும் செய்கின்றனர்.

https://twitter.com/Pista_off/status/1345783943765708805?s=19