Bigg Boss4 Day60 Promo1

நீ வேற கேள்வி கேட்டு குழி பறித்துட்ட என பாலாவிடம் மல்லுக்கட்டி உள்ளார் ரமேஷ்.

Bigg Boss4 Day60 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் அறுபதாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று பாலாஜி முருகதாஸ் ஆரிக்கு போன் செய்து பேசியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

அப்போது இந்த வார தலைவரான ரமேஷ் நீ போன் பண்ணி பேசி அவர் தூக்கத்தை கெடுத்துட்ட. அவர் நைட் எல்லாம் தூங்காம பொலம்பிட்டு இருக்காரு. நீ பாட்டுக்கு பேசி குழி பறிச்சிட்ட என சத்தம் போட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுவரை பேசாமல் அமைதியாக இருந்து வந்த ரமேஷ் செய்ய பாலா பேச வைத்து விட்டதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.