பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss 4 Contestant Secrets : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ ரெடி.. ரிலீஸ் எப்போது தெரியுமா?? – வெளியான தகவல்.!!

இதற்கான அதிகாரப்பூர்வமான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து சில பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக டிக் டாக் மூலமாக இளைஞர்களிடையே கவர்ச்சி காட்டி மிகவும் பிரபலமான இலக்கியாவை இறக்கிவிட திட்டமிட்டுள்ளனர்.

இலக்கியா காட்டப்படும் கவர்ச்சி போதாது என அவருக்கு போட்டியாக 39 வயது கவர்ச்சி நாயகியை களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் இலக்கியாவுக்கு போட்டியாக சமூக வலைதளங்களில் தினம் தினம் கவர்ச்சி வீடியோக்கள் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் 39 வயது நடிகையான கிரன் ரதொட்-ஐ பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனைப் போல நான்காவது சீஸனிலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

ஆனால் குடும்பத்தோடு பார்க்கும் நிகழ்ச்சியில் கவர்ச்சியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து மக்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கவர்ச்சி நாயகிகளை விஜய் டிவி களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. TRP முக்கியம் பாஸ்ஸூ..