Bigg Boss4 3rd Eviction Analysis

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Bigg Boss4 3rd Eviction Analysis : தமிழ் சின்னத்திரை மூலம் நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் வார இறுதியில் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அடுத்த வார வெளியேற்றத்திற்காக ஆஜீத் தேர்வாகி இருந்தார். ஆனால் அவரிடம் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருந்ததால் வெளியேற்ற படலத்தில் இருந்து தப்பித்தார்.

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் வேல்முருகன் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், ஆஜித், சனம், சோம் சேகர், ரியோ ராஜ், நிஷா, வேல்முருகன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இவர்களில் இறுதி கட்ட நிலவரப்படி வேல்முருகன் தான் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தாகவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர்தான் வெளியே வர அதிக வாய்ப்புகள தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.