Bigg Boss 2nd Eviction

இந்த வார பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Bigg Boss4 2nd Eviction Analysis : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் தொடங்கி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்வார எவிக்ஷனில் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்திற்கான எவிக்ஷன் நாளை நடைபெற உள்ளது.

இதற்காக நடிகர் ஆரி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரில் ஆரி பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஓரளவிற்கு நல்ல ஓட்டுகள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அனிதா சம்பத் மற்றும் ஆஜித் ஆகியோர் மட்டுமே குறைவான ஓட்டுகளை பெற்று உள்ளனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

செய்திவாசிப்பாளர் அனிதா எதையாவது பேசி கலவரத்தை உண்டு செய்து வருவதால் அவரை நிச்சயம் வெளியேற்ற மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் ஆஜித் வெளியேறவே வாய்ப்புகள் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

என்ன நடக்கிறது யார் வெளியேறுகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.