Bigg Boss Wild Card Entry | Big Boss 3 | Big Boss Tamil | Big Boss | The departure of four competitors over the past two weeks
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல சின்ன திரை நட்சத்திரம்.

Bigg Boss Wild Card Entry : பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்ற இரண்டு வாரமாக நேயர்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து வருகிறது.

சென்ற இரண்டு வாரத்தில் நான்கு போட்டியாளர்களின் வெளியேற்றம் மற்றும் இரண்டு போட்டியாளர்களின் வருகை என பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பை அடைந்து வருகிறது.

சரவணன் மன்னிப்பு கேட்டும் அவரை வீட்டை விட்டு நீக்கிய பிக் பாஸ், அடுத்து கஸ்தூரியை அழைத்து வந்தது, அவர் வந்தும் பெரிதாக வீட்டில் மாற்றம் ஏற்படாத நிலையில், வனிதா மீண்டும் அழைத்துக் வரப்பட்டார். விருந்தினர் போல் வீட்டின் உள்ளே வந்தாலும் பிறகு அவரை போட்டியாளராக அறிவித்தது பிக் பாஸ்.

பேச்சுலர் வாழ்க்கைக்கு பாய் பாய் சொல்லும் பிரபாஸ் – திருமணப் பெண் குறித்த தகவல் இதோ.!

பிறகு, மதுமிதா தற்கொலைக்கு முயன்று, பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை மீறியதால் அவரையும் வெளியேற்றயது பிக் பாஸ். அடுத்து மக்களால் ஓட்டு போடப்படாமல் அபிராமி வெளியேற்றப்பட்டார்.

இதனால், இந்த வராம் நிச்சயம் ஒரு போட்டியாளரின் வெளியேற்றம் இருக்கும் என்றும், அவர் ரகசிய அறைக்கு அனுப்பப்படலாம் என்றும், இன்னும் இரண்டு வைல்ட் கார்டு என்டரி இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

மேலும், அந்த இரண்டு வைல்ட் கார்டு என்டரியில் ஒருவர் விஜய் டிவி-யில் ராஜா ராணி தொடரில் நடித்த ஆல்யா மானசா என்ற தகவல் வெளியாகி உள்ளது.

எது எப்படியோ பிக் பாஸ் வீட்டில் இன்னும் இரண்டு வைல்ட் கார்டு என்டரி இருப்பது மட்டும் உறுதி.

Alya manasa

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.