Bigg Boss Vs Sun Tv
Bigg Boss Vs Sun Tv

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாக சன் டிவி கையில் எடுக்கப் போகும் புதிய சீரியல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

Bigg Boss Vs Sun Tv : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சானலாக இருந்து வருவது விஜய் டிவி. இந்த டிவி சேனலில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.

இதனால் விஜய் டிவியில் டிஆர்பி இதுவரை இல்லாத அளவாக விறுவிறுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற டிவி சேனல்களில் டிஆர்பி குறைய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி திருமகள் என்ற புதிய சீரியல் ஒன்றை கையில் எடுக்க உள்ளது.

இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த சீரியல் டப் கொடுக்குமா என்பது சந்தேகம் தான். இதனால் சன் டிவியும் ஏதாவது கில்மா நிகழ்ச்சியை இறக்குமதி செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.