
தமிழ் சினிமாவில் சென்னை 28, அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்தவர் விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனரான அகத்தியன் அவர்களின் மகளான விஜி திருமண வாழ்க்கைக்கு பிறகு சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
Gudmorning my world😘!! Starting my new movie with Dir Chimbudevan sir n my darling producer @vp_offl. Need ur love and support ❤️. #shootmode @blacktktcompany pic.twitter.com/TpVQInvQe6
— ITSVG (@vgyalakshmi) October 13, 2018
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெங்கட் பிரபு தயாரிப்பில் 23-ம் புலிகேசி, விஜயின் புலி படங்களை இயக்கி இருந்த சிம்பு தேவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.