Bigg Boss Vanitha 3rd Marriage
Bigg Boss Vanitha 3rd Marriage

பிக்பாஸ் வனிதாவுக்கு சைலண்டாக மூன்றாவது திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss Vanitha 3rd Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜயக்குமாரின் மகள் வனிதா. இவர் திரையுலகில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த வனிதாவுக்கு 2 முறை திருமணம் நடந்து இரண்டும் விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் நெருக்கமாக இருந்து வந்தார்.

அவருடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறினார். ஆனால் ராபர்ட்டுக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்களது திருமணம் நடைபெறவில்லை என பின்னர் தெரிவித்திருந்தார்.

இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க வனிதாவின் ஆதிக்கமே ஆட்சி செய்தது.

அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார்.

தற்போது இவர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை உருவாக்கி அதில் சமையல், குழந்தை பராமரிப்பு, அழகு உள்ளிட்டவை களுக்கான டிப்ஸ்களை வழங்கி வருகிறார்.

இந்தநலையில் வனிதாவிற்கு வரும் ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவருடன்திருமணம் நடைபெற இருப்பதாக திருமண பத்திரிக்கை என்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆனால் அந்த பீட்டர் பால் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே 2 திருமணம் ஆன வனிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.