பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கார்ட் என்ட்ரி ஆக நுழைய போவது யார் யார் என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.

Bigg Boss Ultimate Wildcard Entry Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற ஓவியா கலந்துகொள்வதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் அவர் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டார். இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இதன் வைல்ட் கார்ட் என்ட்ரியில் ஓவியா மற்றும் பரணி ஆகியோர் உள்ளே செல்ல இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஓவியா உள்ளே சென்றால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.