சினேகன், ஜூலியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
Bigg Boss Ultimate Full Contestants List : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இருபத்தி நான்கு மணிநேரமும் ஹாட்ஸ்டார் இல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
பக்கத்து இலைக்கு பாயாசம் போடவேணா.. அம்மாவிடம் பளாரென அறை வாங்கிய அருண் அரவிந்த் – செம Fun

இந்த நிகழ்ச்சியில் சினேகன் மற்றும் ஜூலி ஆகியோர் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அவர்களுடைய பெயர் லிஸ்ட்
- சினேகன்
- ஜூலி
- வனிதா விஜயகுமார்
- அபிநய்
- அனிதா சம்பத்
- பரணி
- ஷாரிக்
- தாடி பாலாஜி
ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பாலாஜி முருகதாஸ், சுஜா வருணி ஆகியோரும் இந்த நிகழ்ச்சி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.