Simbu replaces Kamal Haasan as the host of Bigg Boss Ultimate

போன வேகத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார் போட்டியாளர் ஒருவர்.

Bigg Boss Ultimate 6th Eviction Analysis : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார், சினேகன், தாடி பாலாஜி, சுஜா வருணி, அபிநய் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் உள்ளே சென்ற நிலையில் அவரைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜூலி, அனிதா சம்பத், ஸ்ருதி, தாமரைச்செல்வி, நிரூப், சதீஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களும் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் சதீஷ் மிகக் குறைந்த ஓட்டங்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறார்.

அவருக்கு முந்தைய இடத்தில் அனிதா சம்பத் இருக்கிறார். இதனால் இவர்களில் ஒருவரை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒருவேளை சதீஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் போன வேகத்தில் அவர் வெளியே வந்துவிட்டார் என்று சொல்லலாம். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.