
பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து மீண்டும் ஒரு சீரியலில் நடிக்க உள்ளார் பிக் பாஸ் தாமரைச்செல்வி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரை செல்வி. தெருக்கூத்து கலைஞரான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட தாமரை செல்வி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க தொடங்கினார். சீரியலின் இறுதி கட்டத்தில் நடிக்க வந்த இவர் கிளைமாக்ஸ் வரை கண்ணம்மாவுக்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்த முறை விஜய் டிவி இல்லை, ஜீ தமிழ் தொலைக்காட்சி என தெரியவந்துள்ளது.
ஆமாம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் தான் தாமரைச்செல்வி நடிக்க உள்ளாராம். இந்த சீரியலில் அவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
