Bigg Boss Tamil Season 4
Bigg Boss Tamil Season 4

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Tamil Season 4 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டது.

முதல் சீசனில் வெற்றியைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை முடித்து விட்டது. இதனை அடுத்து நான்காவது சீசன் எப்போது தொடங்கும் யார் இதனை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து ஒரு லிஸ்ட் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஜூன் மாத இறுதியில் இந்த நிகழ்ச்சி தொடங்கி அக்டோபரில் முடியுமென தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.