
டேன்ஜர் சோனில் மூன்று போட்டியாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் வெளியேறப் போவது யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள் வழக்கம் போல அசிம் அதிக ஓட்டுக்களுடன் முதல் இடத்தை பிடிக்க அவருக்கு அடுத்ததாக விக்ரமன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து சிவின், ரட்சிதா மற்றும் தனலட்சுமி உள்ளிட்டோர் மிக குறைந்த அளவில் ஓட்டுகளைப் பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் மூவரில் ஒருவரே வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிலும் குறிப்பாக தனலட்சுமி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.