பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பங்கேற்கப் போகும் போட்டியாளர் குறித்து தெரிய வந்துள்ளது.

Bigg Boss Tamil 6 First Contestant : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவு செய்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்கப் போகும் முதல் போட்டியாளர் இவரா?? கண்டன்ட்க்கு பஞ்சம் இருக்காது போல - யார் அவர் தெரியுமா??

இதனைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 6வது சீசன் தொடங்கும் என சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் போட்டியாளராக மோனிகா ரிச்சர்ட் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மோனிகா ரிச்சர்ட் வேறு யாரும் இல்லை டி இமான் அவர்களின் முன்னாள் மனைவி. இருவரும் விவாகரத்து செய்து கொண்ட பின்னர் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மோனிகா ரிச்சர்ட் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்கப் போகும் முதல் போட்டியாளர் இவரா?? கண்டன்ட்க்கு பஞ்சம் இருக்காது போல - யார் அவர் தெரியுமா??

இதனால் பிக் பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் இவரை போட்டியாளராக களமிறக்க விஜய் டிவி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ லிஸ்ட் வெளிவரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.