Bigg Boss Tamil 4 Contestants Update :
Bigg Boss Tamil 4 Contestants Update :

பிக் பாஸ் சீசன் 4-ல் சற்றும் எதிர்பார்க்காத நடிகை ஒருவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Tamil 4 Contestants Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து நான்காவது சீசன் தொடங்க உள்ளது.

இதற்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்பார்கள் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், விஜய் டிவி புகழ், அனு மோகன் என பலருடைய பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது புதிதாக இன்னொரு பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. அது யாருமே எதிர்பார்க்காத ஒரு நடிகையின் பெயர்.

ஆம், அது வேரு யாருமில்லை லட்சுமி மேனன் தான். தற்போது சினிமாவில் வாய்ப்பில்லாமல் சும்மா இருந்து வரும் லட்சுமி மேனன் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் லட்சுமி மேனன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அப்படியே அந்த ஸ்ரீவித்யாவையும் புடிச்சு போடுங்கப்பா எனவும் கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.