Bigg Boss Tamil 3 : பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழ் மற்றும் தெலுங்குவிற்கு மட்டும் தான் இந்த நிகழ்ச்சி புதியதே தவிர மற்ற மொழிகளுக்கு மிகவும் பழையது தான்.
தமிழில் இரண்டு சீசன்களுமே கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியது. விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வந்தது.
ஆனால் தற்போது மூன்றாவது சீசனில் இது இரண்டிலுமே மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலமாக முழு நேர அரசியலுக்கு வந்து விட்டதால் அவர் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
அதே போல் விஜய் டிவியும் மூன்றாவது சீசனை ஒளிபரப்பாகாது என கூறப்படுகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாக அதீத வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அவர்கள் தரப்பிலும் சரியான விளக்கம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.