Bigg Boss Snehan Marriage

விரைவில் பிக் பாஸ் சினேகன் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Snehan Marriage : தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி ஹிட் பாடல்களை கொடுத்தவர் கவிஞர் சினேகன். அதுமட்டுமல்லாமல் யோகி, உயர்திரு 420 உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததார். பின்னர் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தற்போது இவருக்கு வெகு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சினேகன் திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் உலக நாயகன் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் என தெரிய வந்துள்ளது.