Bigg Boss Snehan Helps to Ganesan
Bigg Boss Snehan Helps to Ganesan

தல அஜித்திடம் உதவி கேட்ட நடிகருக்கு வீட்டிற்கு சென்று உதவியுள்ளார் பிக்பாஸ் பிரபலம் ஒருவர்.

Bigg Boss Snehan Helps to Ganesan : கொரானா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வறுமையில் வாடும் பல குடும்பங்கள் உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றன.

சாதாரண பொது ஜன மக்களைப் போலவே திரையுலகில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் நடிகர்களில் கலைஞர்களும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

திடீரென விஜய்க்கு நன்றி கூறி புகைப்படம் வெளியிட்ட அட்லி, விஷயம் இது தான் – புகைப்படத்துடன் இதோ.!

தீப்பெட்டி கணேசன் என்ற நடிகர் தன்னுடைய குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லை தயவுசெய்து உதவுங்கள் என அஜித்துக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இவரின் வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்கு உதவினார். மேலும் உங்களது வீடியோவை நான் அஜித்தின் மேனேஜருக்கு அனுப்பியுள்ளேன் நிச்சயமாக அவரும் உதவுவார் என கூறியிருந்தார்.

லாரன்ஸை தொடர்ந்து பிக் பாஸ் பிரபலமும் பாடல் ஆசிரியருமான கவிஞர் சினேகன், தீப்பெட்டி கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுடைய பிள்ளைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

சினேகனின் இந்தச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.