பிரபல நடிகை மீது மோசடி புகார் கொடுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் சினேகன்.

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராகவும் நடிகராக சில படங்களில் நடித்திருப்பவர் சினேகன். கன்னிக்கா ரவி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிரபல நடிகை மீது மோசடி புகார் கொடுத்த பிக் பாஸ் பிரபலம் சினேகன் - அப்படி என்னதான் நடந்தது?

இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சினேகன் தற்போது ஜெயலட்சுமி என்ற சின்னத்திரை நடிகை மீது பணம் மோசடி புகார் அளித்துள்ளார். தனது பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையை பெயரை வைத்து ஜெயலட்சுமி பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த விஷயம் அறிந்து அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய போதும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை. ஆகையால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் சலசலத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகை மீது மோசடி புகார் கொடுத்த பிக் பாஸ் பிரபலம் சினேகன் - அப்படி என்னதான் நடந்தது?

பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள ஜெயலட்சுமி சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.