ஸ்லிம்மிங் போட்டோ அனுப்புமாறு ரசிகர் ஒருவர் கேட்க ஷெரின் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss Sherin Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ஷெரின்.
இதை படத்தை தொடர்ந்து விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் அதன் பின்னர் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்.
அதன் பின்னர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷெரின் ரசிகர்களின் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்து வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் உங்களின் ஸ்விம்மிங் போட்டோ அனுப்புங்க என கேட்டுள்ளார். இதனையடுத்து ஷெரின் தண்ணீரில் இருந்து எழுவது போல போலி வீடியோ ஒன்றை வெளியிட்டு ஓகே வா எனக் கேட்டு அந்த ரசிகருக்கு பல்பு கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ஷெரின் ரசிகர்கள் ஆனாலும் இவ்வளவு குசும்பு ஆகாது என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.