Bigg Boss Sherin Upcoming Movies
Bigg Boss Sherin Upcoming Movies

பிக்பாஸ் ஷெரின் தன்னுடைய நடிப்பு ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் ஆசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Sherin Upcoming Movies : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷெரின்.

இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்.. இவங்க தான் என் மாமியாரா என கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்!

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இதுவரை இரண்டு படங்களுக்கு கதை கேட்டு வைத்திருப்பதாக ஷெரின் கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு தனுஷுடன் சேர்ந்து நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை என கூறியுள்ளார்.

ஷெரின் ஆசையை கேட்ட தனுஷ் ரசிகர்களுக்கும் அதே ஆசை உருவாகியுள்ளது. அவர்களும் துள்ளுவதோ இளமை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என கூறி வருகின்றனர்.