Bigg Boss Sherin About Corona Vaccine

கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிக்பாஸ் ஷெரின் அதன் பின்னர் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து பதிவு செய்துள்ளார்.

Bigg Boss Sherin About Corona Vaccine : தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ஷெரீன். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

அதன்பின்னர் ஓரளவிற்கு பழைய நிலைமைக்கு வந்துள்ளார். தற்போது இவருக்கு தேடியும் சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அனைவரை போல ஷெரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட இவருக்கு தலைவலி, உடல் வலி, லேசான காய்ச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளன. இதனால் தனக்கு மருந்து வேலை செய்கிறது. நீங்களும் மறக்காமல் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என ஷெரின் தெரிவித்துள்ளார்.