Bigg Boss Shariq

Bigg Boss Shariq : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரியாஸ் கான். இவருடைய மூத்த மகன் ஷாரிக். பென்சில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

அதே சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தாவை காதலித்து வருவதாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஷாரிக் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அட்டு படத்தை இயக்கி இருந்த ரத்தன் லிங்கா இயக்க உள்ள இந்த படத்திற்கு உக்ரம் என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் நாயகியாக அட்டு படத்தில் நாயகியாக நடித்திருந்த அர்ச்சனாவே நடிக்க உள்ளார். மேலும் இப்படம் ரொமான்டிக் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

அட்டு படத்தில் அர்ச்சனாவின் அற்புதமான நடிப்பு திறமையை பார்த்து தான் மீண்டும் அர்ச்சனாவுக்கு வாய்ப்பு கொடுத்ததாக இயக்குனர் கூறியுள்ளார்.

Shariq

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.