பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் அடுத்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முதல் தற்போது வரை நிகழ்ச்சியில் நடக்கும் விசயங்கள், டாஸ்க்குள் என அனைத்தும் மற்ற மொழி பிக் பாஸ் நிகழ்சிகளை பார்த்து காபி அடிக்கப்பட்டு வருவதாக தொடர் குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது வெளியாகி வைரலாகி வரும் புகைப்படங்களும் அதனை உறுதி செய்து ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

பைனலுக்கு நேரடியாக செல்வதற்காக கொடுக்கப்பட்ட டாஸ்க், நேற்று பெட்டிகளை வைத்து கொடுக்கப்பட்டு இருந்த டாஸ்க் ஆகியவை மற்ற மொழிகளில் இருந்து காப்பியடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் இந்த நிகழ்ச்சியில் எது தான் உண்மை? போட்டியாளர்கள் முதல் உலக நாயகன் வரை அனைத்துமே பொய் தானா என நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.