பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bigg Boss Season 7 Launch Date : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏழாவது சீசன் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியானது, அதுமட்டுமல்லாமல் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இடம் பெற இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதனால் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பம் எப்போது என்று ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்து அறிவிக்கும் வெளியாகிவிட்டது. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது விஜய் டிவி.

இதனால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.