பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Bigg boss season 5 update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். தற்போது நான்கு சீசன் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் குறித்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் காரணத்தால் பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்தத் தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.