Bigg Boss season 2 actor gets arrested
Bigg Boss season 2 actor gets arrested

செக் மோசடி வழக்கில் மராத்தி போலீசார் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே சென்று கைது செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss season 2 actor gets arrested – இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசன் இன்று துவங்கவுள்ளது.

இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!

முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

இது ஒரு பக்கமிருக்க மராத்தியில் இதன் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது இதில் அபிஜித் என்பவர் போட்டியாளராக பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் இவரை செக் மோசடி வழக்கில் மராத்தி போலீசார் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே சென்று கைது செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Abhijeet Bichukale