பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்று வெற்றிகரமான நிறைவு பெற்றது. இந்த சீஸனின் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இரண்டாவது இடத்தை ஐஸ்வர்யா தத்தாவும் மூன்றாவது இடத்தை விஜயலக்ஷ்மியும் பெற்றுள்ளனர். நேற்றைய எபிசோடில் ஆரம்பத்தில் கமல்ஹாசன் பேசும் போது அவரிடம் மக்கள் ஒரு சில கேள்விகளை கேட்டனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் நீங்கள் தொகுத்து வழங்குவீர்களா? என கேட்டதற்கு கமல்ஹாசன் மூன்றாவது அல்ல எத்தனை சீசன் என்றாலும் அதை நான் தான் தொகுத்து வழங்குவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.