Bigg Boss Sandy Latest Video
Bigg Boss Sandy Latest Video

குழந்தையாக மாறி சாண்டி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Bigg Boss Sandy Latest Video : தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக சாண்டிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோ, புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை குஷி ஆக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது குழந்தை போல் மாறி டேய் முகினே, கவினே, தர்ரு செம போர் அடிக்குது டா. எங்க அம்மா வெளியவே விட மாட்றாங்க.

வாவ்.. இவர் தான் ஜோடியா?? ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜயின் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை – தெறிக்க போகும் தளபதி 65!

உங்க உங்க வீட்டிலேயே ஒளிந்து கோங்க நான் எங்க வீட்டுல ஒளிஞ்சிகிறேன் நம்ப மாறி மாறி ஐஸ் பாய் விளையாடலாம் என பேசியுள்ளார்.

சாண்டி வெளியிட்ட இந்த வீடியோவுக்கு முகேன் மற்றும் தர்ஷன் ஆகியோர் சிரிப்பது போல கமெண்ட் அடித்துள்ளனர்.

இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் சாண்டி தன் மனைவியுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது