Bigg Boss Sakshi | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss3 | VijayTV | Please forgive me if I am unintentionally speaking abusively.
தனது சமூக வலைதள பக்கத்தில் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சாக்ஷி அகர்வால்.

Bigg Boss Sakshi : பிக் பாஸ் வீட்டில் விருந்தினராக சென்ற சாக்ஷி அகர்வால் வீட்டின் உள்ளே இருக்கும் போது பிரச்சனை  ஏற்பட்டது.

அந்த பிரச்சனையில் செரினை சமாதனம் செய்யும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களை நாய் என்று சாக்ஷி கூறினார்.

இதனை, கமல் அவரிடம் கேட்ட போது ஏதோ காரணங்களை சொல்லி தப்பித்து விட்டார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

அவர் பதிவிட்டது:

“அனைத்து பிக் பாஸ் பார்வையாளர்களை, நான் கூறிய வார்த்தை உங்கள் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கும் என்று இப்பொழுது தெரிகின்றது. அதற்கு நான் உண்மையாக மன்னிப்பு கேட்கிறேன்.

Bigg Boss sakshi

மேலும், அது பொதுவாக கூறியது இல்லை. சாதாரணமாக செரினை சமாதானம் செய்ய கூறிய பழமொழி.

இது போன்று மற்றொரு முறை நடக்காது, உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு, ஆதரவை என்றும் நான் மதிக்கிறேன்.

நீங்கள் என்னுடைய குடுப்பத்தினார்கள் போன்றவர்கள். நான் தெரியாமல் எதார்த்தமாக தவறாக பேசி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here