Bigg Boss Reshma in Modern Photos

மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ஆளை மயக்கி உள்ளார் நடிகை ரேஷ்மா.

Bigg Boss Reshma in Modern Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்தப்படம் மட்டுமல்லாமல் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழுநேர கவர்ச்சிக்கு மாறியுள்ளார் ரேஷ்மா. சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.