டைட்டிலை வென்ற பிறகு கையில் ட்ராபியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

Bigg Boss Raju With Trophy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான கிராண்ட் பினாலே இன்று நடைபெற உள்ளது.

இதற்கான ஷூட்டிங் நேற்று நடந்து முடிந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் ஆதரவைப் பெற்ற ராஜு டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றுள்ளார். அடுத்ததாக பிரியங்கா இரண்டாவது இடத்தைப் பிடிக்க பாவனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ராஜு டைட்டில் வின்னர் ட்ராபியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.