பிக்பாஸ் வீட்டிற்குள் கணவர் பற்றி பிரியங்கா வாய் திறக்காதது ஏன் என தெரியவந்துள்ளது.

Bigg Boss Priyanka About Husband : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி முடிவடைந்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள் கணவர் பற்றி வாய் திறக்காத ப்ரியங்கா.. அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா? வெளியான விவரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பிரியங்கா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது கூட பிரியங்காவின் கணவர் வரவில்லை. மேலும் ஒரு எபிசோடில் கூட பிரியங்கா தன்னுடைய கணவர் பற்றி வாய் திறந்து பேசியதில்லை. இதனால் இருவருக்கும் ஏதாவது பிரச்சனையா? கணவரை பிரியங்கா விவாகரத்து செய்து விட்டாரா என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.

பிக்பாஸ் வீட்டிற்குள் கணவர் பற்றி வாய் திறக்காத ப்ரியங்கா.. அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா? வெளியான விவரம்

இப்படியான நிலையில் தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார் பிரியங்கா. அதாவது பிக் பாஸ் குழுவில் போட்டியாளர்களின் உறவினர்கள் பணியாற்றினார் அவர்கள் பற்றி நிகழ்ச்சியில் பேசக்கூடாது என்பது விதிமுறை. அதனால் தான் அவரைப் பற்றி பேசவில்லை என கூறியுள்ளார். மேலும் பிரியங்காவின் கணவர் பிரவீன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்சோல் மேனேஜராக பணியாற்றி உள்ளார். இதனால் தான் பிரியங்கா கணவர் பற்றி பேசவில்லை என சொல்லப்படுகிறது.