திருமணம் குறித்து பேசி உள்ளார் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஏழாவது சீசனில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதீப் ஆண்டனி. இவர்தான் டைட்டில் வின்னராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இது பிரதிப் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர் வெளியேறிய பிறகு மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தமான நிலையில் திருமணம் எப்போது என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த பிரதீப் “காசு வந்தா தான் கல்யாணம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவர் சொன்ன இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.