பிக் பாஸ் முகெனின் தந்தையின் மரணம் முகேனையும் அவரது குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் முகேன் ராவ்.
மலேசியாவை சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சியினால் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் முகெனின் தந்தை திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவருடைய மறைவு முகேன் ரசிகர்கள் மத்தியிலும் முகெனின் குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.