Mohan Vaidya
அப்படியே மோகன் வைத்யா போலவே மாறி கட்டிப்புடி வைத்தியத்தில் இறங்கி கலாய்த்துள்ளார் சாண்டி.

Bigg Boss Mohan Vaithya : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

முதல் வாரம் பாத்திமா பாபு, இரண்டாவது வாரம் வனிதா ஆகியோர் வெளியேறியதை தொடர்ந்து நேற்று மூன்றாவது ஆளாக மோகன் வைத்யா எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த சில வாரங்களாகவே மோகன் வைத்யா முத்தம் வைத்யாவாகவே மாறி விட்டது ரசிகர்கள் மத்தியில் முக சுளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் வெளியேற்றப்பட்டதற்கான முக்கிய காரணமாகவும் அதுவாக தான் இருக்கும் என கூறுகின்றனர் ரசிகர்கள்.

ஆசையை அடக்குங்க.. யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து ஜொள்ளு விடும் நடிகர் – வைரலாகும் போட்டோ.!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் சாண்டி அப்படியே மோகன் வைத்யாவாகவே மாறியது மட்டுமில்லாமல் ரேஷ்மா போன்றோரையும் அவரை போலவே கட்டி பிடிக்கிறார்.

இது பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கா அல்லது சாண்டியே செய்யும் அளப்பறையா என்பது இன்றிரவு தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.