Kavin
பிக் பாஸ் கவினுக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் படத்தின் மூலமாக அறிமுகமாகி சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக மக்கள் மனதை வேட்டையாடியவர் கவின்.

அதன் பின்னர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னனு தெரியுமா? என்ற படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார் எனலாம். பிக் பாஸ் புகழால் கவினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தின் கனா தர்ஷனும் கவினும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்களாம்.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் தயாரிக்க ஒரு படத்திலும் கவின் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனை உண்மை என உறுதி செய்யும் வகையில் சிவா, கவின், தர்ஷன் ஆகியோர் இயக்குனர் நெல்சனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

Bigg Boss Kavin

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.