Bigg Boss Kavin Photo
Bigg Boss Kavin Photo

அப்பா அம்மாவுக்குப் பிறகு என்னுடன் இருப்பது நீ மட்டும் தான் என கவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Kavin Photo : தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் கவின். சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியலில் வேடனாக ரசிகர்களை கவர்ந்த இவர் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலமாக அறிமுகமான கவின் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மாபெரும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

மின்மினி பூச்சி போல் ஜொலிக்கும்.. கடல் கன்னி… ஹன்சிகா மோத்வானியின் டிராகன் போட்டோ ஷூட் !(Opens in a new browser tab)

அடுத்ததாக வெள்ளித்திரையில் லிப்ட் என்ற படத்தில் நடிகை அமிர்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் கவின் பதிவிடும் அனைத்து பதிவுகளும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆகி விடுகிறது.

அந்தவகையில் தற்போது மின் விசிறி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என் அப்பா அம்மாவிற்கு பிறகு என்னுடன் இருப்பது நீ மட்டும் தான். உனக்கும் எனக்கும் இப்போ 30 வயது ஆகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கவின் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் ஒரு லட்சத்திற்கும் மேலான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

கவின் தான் நடித்துள்ள லிப்ட் படத்திற்கும் டப்பிங் கொடுத்து அதன் பணிகளையும் முடித்து வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.